முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு நடத்தலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்படுவதாகவும் தமிழக முதல் அமைச்சர் அறிவித்திருந்தார்
இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த தோடு முதல்வருக்கு கட் அவுட் மற்றும் போஸ்டர் அடித்தும் நன்றியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென பல்கலைக்கழகங்கள் விரும்பினால் முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு நடத்தலாம் என பல்கலைக்கழகங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
எனவே முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாமா? என்பதை பல்கலைக்கழகங்கள் தான் இனி முடிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்கள் அனைவரும் அரியர்ஸ் உள்பட அனைத்து பாடங்களிலும் பாஸ் என்ற அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் இது போன்ற ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்