மசூதி குறித்து சர்ச்சையாக பேசிய ராஜ் தாக்கரேவுக்கு சுப்பிரமணியசுவாமி கண்டனம்

Subramanian Swamy
Last Updated: சனி, 28 ஜூலை 2018 (20:59 IST)
முஸ்லிம்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்க ஸ்பீக்கர்களை பயன்படுத்துவதை விமர்சித்த ராஜ் தாக்கரேவுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கண்டணம் தெரிவித்துள்ளார்.

 
மகாராஷ்டிரா மாநிலம் நவ்நிர்மண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே நேற்று செய்தியாளர் சந்திப்பில், முஸ்லிம்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்க ஸ்பீக்கர்களை பயன்படுத்துவது ஏன்? தொழுகை நடத்த விரும்பினால் அவர்கள் வீட்டிலேயே தொழுதுகொள்ளட்டும் என்று கூறியிருந்தார்.
 
இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுதொடர்பாக பேசிய இந்திய முஸ்லிம்கள் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் ஃபரூக்கி, முஸ்லிம்கள் தங்கள் தொழுகைக்கு அழைப்பு விடுக்க ஸ்பீக்கர் உபயோகிப்பதை தவறு என நினைத்தால், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் சடங்குகளையும் அவர் தடை செய்யவேண்டும் என்று கூறினார்.
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜ் தாக்கரேவின் இந்த கருத்து முற்றிலும் அரசியல் நோக்கமுடையது. முதன்மை கட்சிகளில் ஒன்றாக இருக்கும் சிவசேனாவுடன் போட்டி போடுவதை வெளிக்காட்டவே ராஜ் தாக்கரே இவ்வாறு கூறியதாக சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :