வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஜூன் 2023 (08:45 IST)

நீங்களாகவே பதவி விலகிவிடுங்கள்: ரயில்வே அமைச்சருக்கு சுப்ரமணிய சுவாமி வலியுறுத்தல்

பிரதமர் சொல்வதற்கு முன் நீங்களாகவே பதவி விலகிடுங்கள் என ரயில்வே அமைச்சருக்கு பாஜக பிரமுகர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார். 
 
ஓடிஸா ரயில் விபத்து குறித்து சுப்பிரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய போது வேகமாக சென்ற அந்த ரயில் அந்த தண்டவாளத்தில் சென்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை, அந்த தண்டவாளமே மெதுவான ரயில்களுக்கானது என்பதை இப்போது நமக்கு தெரிகிறது. 
 
ஆகவே ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். பிரதமர் சொன்னால்தான் பதவி விலகுவேன் என இருக்கக்கூடாது. மேலும் மோடி ஒரு திறமையற்ற அல்லது பொருத்தமற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் உலகப் புகழ் பெற்றவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதற்கு அவர் சரியான விலையையும் கொடுத்து வருகிறார் 
 
இதற்கு இன்னொரு உதாரணம் தான் மணிப்பூர் விவகாரம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
Edited by Siva