1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (09:05 IST)

ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்! 3 பேர் பரிதாப பலி! – மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு!

Fire
கேரளாவில் ஓடும் ரயிலுக்கு திடீரென மர்ம நபர் ஒருவர் தீ வைத்த சம்பவத்தில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் ஆலப்புழாவிலிருந்து கண்ணூருக்கு விரைவு ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. இந்த ரயில் கோழிக்கோடு அருகே சென்றுக் கொண்டிருந்தபோது அதில் பயணித்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை ரயிலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதை கண்டு அலறிய பயணிகள் சிலர் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளனர். சிலர் செயினை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயன்றுள்ளனர். உடனடியாக ரயில் வேகம் குறைக்கப்பட்டு நிறுத்தப்பட்டதுடன், தீயணைப்பு வீரர்கள், ரயில்வே போலீஸார் சம்பவ இடம் விரைந்துள்ளனர். ஆனால் அதற்கு தீ வைத்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

இந்த விபத்தில் ரயிலில் இருந்து வெளியே குதித்த ஒரு குழந்தை, பெண் உள்பட மூன்று பேரின் சடலங்கள் தண்டவாளத்தில் கிடைத்துள்ளது. தீ விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ வைத்த மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் உதவியுட போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K