வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (02:28 IST)

மயங்கி கிடந்த பக்தரை மயானத்தில் வீசிய ஊழியர்கள்

மயங்கி கிடந்த பக்தரை மயானத்தில் வீசிய ஊழியர்கள்

மகாராஷ்டிர மாநிலம் சிருடியை சேர்ந்தவர் பிரதிமா சிவாஜிபோசி(78). 4 நாட்களுக்கு முன்பு விஜயாவாடா வந்த அவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தனியாக வந்துள்ளார்.


 
உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் நேற்றுமுன்தினம் திடீரென சுருண்டு விழுந்துள்ளார்.இதை பார்த்த தேவஸ்தான சுகாதார ஊழியர்கள், அவர் இறந்துவிட்டதாக நினைத்து ஒரு மூட்டையில் கட்டி குப்பை லாரியில் ஏற்றிச்சென்று பாலாஜி நகரில் உள்ள மயானத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் மயானம் வழியாக சென்ற பொதுமக்கள் மூட்டை அசைவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து திருமலை 2வது நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், மூட்டையை பிரித்து பார்த்தனர். இதில் முதியவர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரோடு இருப்பது தெரியவந்தது. பின்னர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.