அஜீத் பற்றி ஸ்ரீரெட்டி என்ன சொன்னார் தெரியுமா?

Last Updated: திங்கள், 16 ஜூலை 2018 (19:15 IST)
தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்தார்.  

 
இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், மேலும் நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார். அந்த வரிசையில் குஷ்புவின் கணவரும் மற்றும் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி ஸ்ரீரெட்டியின் லிஸ்டில் சிக்கியுள்ளார்.
 
இந்நிலையில், அவர் தினமும் தனது ரசிகர்களுடன் முகநூலில் நேரடியாக உரையாடி வருகிறார். சிலரின் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருகிறார். சமீபத்தில் அவர் அப்படி நேரடியாக பேசிய போது “தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார்?” என ஒருவர் கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு சற்று நேரம் யோசித்த ஸ்ரீரெட்டி “அஜீத் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்” என பதலளித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :