1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (16:02 IST)

மகள் திருமணத்திற்காக ரூ. 500 கோடி செலவிடும் அமைச்சர் !

கர்நாடக மாநில அமைச்சர் ஸ்ரீ ராமுலு என்பவர் தனது மகளின் திருமணத்துக்காக ரூ. 500 கோடி செலவில் நடத்தி வருகிறார்.
 
பாஜக கட்சியில் இருந்து விலகி இருக்கு, கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, தனது மகள் பிரம்மனியின் திருமணத்தை 2016 ஆம் ஆண்டு ரூ.550 கோடி செலவில் பிரமாண்டமாக நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மகள் திருமணத்திற்காக ரூ. 500 கோடி செலவிடும் அமைச்சர் !
இந்நிலையில், தனது மகள் பிரம்மனியின் திருமணத்தை ரூ.500 கோடி செலவில் தொடர்ச்சியாக 9 நாட்களுக்கு நடத்தி வருகிறார். கடண்ட மாதம் பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கிய  திருமண ஏற்பாடுகள் வரும் மார்ச் 5 ஆம் தேதி வரை நடக்கிறது.
 
இந்த விழாவில்  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் உள்ள முன்னணி தலைவர்கள் , கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
குறிப்பாக இந்த திருமணத்திற்காக 1 லட்சம் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்காக பெங்களூர் பேலஸ் மைதானத்தில் சுமார் 40 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படவுள்ளது. இதில்,27 ஏக்கர் திருமண நிகழ்ச்சிகளுக்கும், மீதி 15 ஏக்கர் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மகளின் திருமணத்திற்காஅக ரூ 500கோடி செலவு செய்யும் அமைச்சரின் செயல் இந்தியாவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.