செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (18:21 IST)

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 15 வரை ரத்து

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பதாக மத்திய மாநில அரசு அறிவித்திருந்த போதிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சிறப்பு ரயில்கள் தவிர மின்சார ரயில்கள் மற்றும் பிற ரயில்கள் தொடர்ந்து இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்களை செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது’ ரத்து செய்யப்பட்டு ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு:
 
1. 02605/06 திருச்சிராப்பள்ளி - செங்கல்பட்டு (வழி: விருத்தாச்சலம்‌) சிறப்பு
அதிவேக விரைவு சிறப்பு ரயில்‌
 
2. 02635/36 மதுரை - விழுப்புரம்‌ அதிவேக விரைவு சிறப்பு ரயில்‌
 
3. 02679/80 கோயம்புத்தூர்‌ - காட்பாடி அதிவேக விரைவு சிறப்பு ரயில்‌
 
4. 06795/96 திருச்சிராப்பள்ளி - செங்கல்பட்டு (வழி: மயிலாடுதுறை) விரைவு
சிறப்புரயில்‌
 
5. 02675 கோயம்புத்தூர்‌ - அரக்கோணம்‌ அதிவேக விரைவு சிறப்பு ரயில்‌
 
6. 02083/84 கோயம்புத்தூர்‌ - மயிலாடுதுறை ஜனசதாப்தி சிறப்பு ரயில்‌
 
7. 02627/28 திருச்சிராப்பள்ளி - நாகர்கோவில்‌ இன்டர்சிட்டி அதிவேக விரைவு
சிறப்புரயில்‌
 
இருப்பினும்‌ 02433/02434 சென்னை சென்ட்ரல்‌ டு புது தில்லி இடையே
இயங்கி வரும்‌ ராஜ்தானி சிறப்பு ரயில்‌ மறு அறிவிப்பு வரும்‌ வரை
தொடர்ந்து இயங்கும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது