1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2015 (19:07 IST)

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி அமெரிக்கா பயணம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்று  காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா தெரிவித்துள்ளார்.


 
 
மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார் என்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா சென்றிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார். ஒரு வாரம் அங்கு தங்கியிருந்து சோனியா காந்தி பரிசோதனைகளை மேற்கொள்கிறார். மருத்துவ பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து விட்டு, ஒரு வாரத்துக்குப்பின் சோனியா காந்தி நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
மருத்துவ பரிசோதனைக்காக  சோனியா காந்தி அமெரிக்கா செல்வது வழக்கம். பீகார் சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்ததால் கடந்த 2 மாதங்களாக அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.