ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (18:16 IST)

இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார்: காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தேசிய தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று இன்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இன்று காலை பெரும் பரபரப்பிற்கு இடையே இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஏற்கனவே இடைக்கால தலைவராக இருந்த சோனியா காந்தி ராஜினாமா செய்துவிட்டதாகவும் எனவே காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இன்று நடந்த கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி தனக்கு தலைவர் பதவி வேண்டாம் என்று கூறியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் சோனியா தான் தலைமை பதவியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தேசிய தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய தலைவர் தேர்வு இப்போதைக்கு இல்லை என்பது உறுதியாகியுள்ளது