1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By papiksha
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2019 (11:48 IST)

பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை - பிரபல அரசியல்வாதியின் மகன் தலைமறைவு!

பிரபல மாடல் அழகியும் தெலுங்கு நடிகையுமான சஞ்சனா பிக்பாஸ் 2-வது சீசனிலும்  பங்கேற்று பிரபலமடைந்தார்.  27 வயதாகும் இவர் தபோது ஹைதராபாத் மந்தாப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இரவில் சென்றுள்ளார்.  அப்போது தெலங்கானா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக இளைஞரணியைச் சேர்ந்தவருமான நந்தேஷ்வர் கவுடுவின் மகன் ஆஷிஷ் கவுடு அங்கு வந்துள்ளார். 
 
அங்கு சஞ்சனாவை சந்தித்த ஆஷிஷ்  அவரிடம் தாக்காத முறையில் நடந்துகொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பிவந்த நடிகை சஞ்சனா " கையை பிடித்து இழுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை மாடியில் இருந்து கீழே தள்ள முயற்சித்தாகவும் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும். அது சம்மந்தப்பட்ட சிசிடிவி காட்சிக்கு அந்த ஓட்டல் சாட்சி என கூறினார். 
 
பின்னர் மந்தாப்பூர் போலீசார், ஆஷிஷ் கவுடு மற்றும் அவரது நண்பர்கள் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து  ஆஷிஷ் கவுடு  தற்போது தலைமறைவாகியுள்ளார்.