வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (10:02 IST)

கர்மா இஸ் எ பூமராங்க் – சிதம்பரம் கைதின் பின்னணில் சில சுவாரஸ்யத் தகவல்கள் !

சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல கடந்தகால தகவல்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டர். 9 முறை இந்தியாவின் பட்ஜெட் தாக்கல் செய்தவரும், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியப் பதவிகளை வகித்தவருமான சிதம்பரம் கைது இந்திய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருக்கும் சிபிஐ கட்டிடம் அவரால் கடந்த 2011 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த போது அவர் கட்டுப்பாட்டில் இருந்த சிபிஐ மூலம் 2010ஆம் ஆண்டு சொராபுதீன் போலி என்கவுன்டர் விவகாரத்தில் அப்போதைய குஜராத் மாநில அமைச்சர் அமித் ஷாவைக் கைது செய்தார். இப்போது அமித் ஷா உள்துறை அமைச்சராக இருக்கும்போது ப சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.