செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜூலை 2019 (13:41 IST)

”ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம், வாராய் கண்ணே”…’பாம்பு போல் நடனமாடும் ஜேசிபி”: வைரல் வீடியோ

டிக் டாக்கில் வைரலாகும் பல விநோதமான வீடியோக்களை தொடர்ந்து, தற்போது வீடுகளை இடிக்க உதவும் இயந்திரமான ஜேசிபி ஒன்று, பாம்பு நாட்டியம் ஆடுகிற வீடியோ டிரெண்டிங்கில் உள்ளது.

டிக் டாக் செயலி மேல் பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பல விநோதாமான அல்லது வித்தியாசமான முயற்சிகளை டிக் டாக் செயலி மூலம் பலர் செய்து கொண்டு தான் வருகின்றனர். அந்த வகையில், வீடுகளை இடிக்க உதவும், ஜேசிபி ஒன்று ”பாம்பு டான்ஸ்’ ஆடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு சிறுவன் மகுடி போல ஒரு குழாயை வைத்து ஊத, ஜேசிபி-யின் பின்புறம் கை போன்ற உருவம் கொண்ட இயந்திரங்கள் பாம்பு போல நடனமாடுகின்றன. இந்த வீடியோவை காண்போர் கண்களுக்கு பெரும் வேடிக்கையான ஒன்றாகவும், கற்பனை திறன் மிகுந்த முயற்சியாகவும் தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காக உள்ளது.