1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : திங்கள், 22 மே 2017 (11:44 IST)

இன்று ஒருநாள் மட்டும் ராகுல்காந்தியை மன்னிக்கின்றேன். ஸ்மிருதி இரானி

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இருப்பினும் மாநிலங்களவை உறுப்பினர் மூலம் மத்திய அமைச்சர் ஆனவர். ராகுல் காந்தியிடம் தோல்வி அடைந்தவர் என்பதால் அவ்வப்போது அவரை கடுப்பேற்றும் வகையில் ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்து கொண்டே இருப்பார்.



 


இந்நிலையில் இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ஸ்மிருதி ராகுல்காந்தி குறித்து ஏதாவது கருத்து கூறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று ராகுல்காந்தியின் தந்தை ராஜீவ் காந்தியின் நினைவு நாள் என்பதால் இன்று ஒருநாள் மட்டும் அவரை மன்னித்து விடுவதாகவும், அவரை இன்று விமர்சனம் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 'ராகுலின் சொந்த தொகுதியான அமேதியில் இதுவரை எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்றும் 60 ஆண்டுகளாக, அந்த தொகுதி அப்படியேதான் உள்ளதாகவும், ராகுல் தனது சொந்த தொகுதியின் நலனை மறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.