1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (09:26 IST)

எக்கச்சக்க நன்கொடை வசூல்..! அரசியல் கட்சிகளுக்கு லாக் வைக்க தேர்தல் ஆணையம் திட்டம்?

Election Commission
அரசியல் கட்சிகள் வரைமுறை இல்லாமல் நன்கொடை வசூல் செய்வதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

நாடு முழுவதும் பல தேசிய மற்றும் மாநில கட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த கட்சிகளுக்கான நன்கொடை பலரிடம் இருந்தும் பெறப்படுகிறது. இந்த நன்கொடையில் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் பெறப்படும் நன்கொடைகள் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.

இதனால் பல அரசியல் கட்சிகள் விவரமாக ரூ.20 ஆயிரத்திற்குள் ரொக்கமாக நன்கொடையை வசூலிக்கின்றன. இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வராமலே பெரும் பணத்தை அரசியல் கட்சிகள் திரட்டி விடுகின்றன.


இதனால் நன்கொடை பெறுவதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டி சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில் நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்க வேண்டும். ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் அளிக்கப்படும் நன்கொடைகள் காசோலை அல்லது மின்னணு பரிமாற்றத்தின் மூலம் அளிக்கப்பட வேண்டும். ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் பெறப்படும் தொகை குறித்த அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு சமர்பிக்கப்பட வேண்டும்” என்று சட்டவிதிகளை மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.