1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : புதன், 24 ஆகஸ்ட் 2016 (09:54 IST)

’குவியும் பரிசுகள்’ - வீடுகளிலும் கோடிகளிலும் புரளும் சிந்து

’குவியும் பரிசுகள்’ - வீடுகளிலும் கோடிகளிலும் புரளும் சிந்து

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்துவிற்கு பரிகள் குவிந்த வன்னம் உள்ளது.


 


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வரும் சிந்துவிற்கு, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், 1000 சதுர மீட்டர் வீடு ஒன்றை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது மட்டும்மல்லாமல், 5 கோடி ரூபாய் பரிசும் வழங்குவதாக அறிவித்தார். மேலும், அவருக்கு அரசு வேலை தயராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு போட்டியாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ”சிந்துவின் தாயார் எங்க ஊரான விஜயவாடாவைச் சேர்ந்தவர், அதனால் சிந்து எங்க பொண்ணு” என கூறி, சிந்துவிற்கு ரூ. 3 கோடி பரிசுத் தொகை மற்றும் அமராவதியில் ஆயிரம் சதுர மீட்டர் வீடு மற்றும் குரூப் 1 அதிகாரி பதவியும் அறிவித்தார்.

இது மட்டும்மல்லாமல் சிந்துவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பரிசுகள் குவிந்த வன்னம் உள்ள நிலையில், தான், செய்த கடின பயிற்சியும், உறுதியான உடலுக்கு தான் மேற்கொண்ட தவ வாழ்க்கையும், வீண் போகவில்லை என சிந்து மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.