1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (22:45 IST)

போராடும் மாணவர்களுக்கு பிரியாணி, டீ கொடுக்கும் சீக்கியர்கள்!

டெல்லியில் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக சீக்கிய சகோதரர்கள் பிரியாணி மற்றும் டீ கொடுத்து வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் மாணவர்கள் மீது போலீசார் தாக்கியதை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது டெல்லியில் 10 டிகிரி செல்சியஸ் என குளிர் வாட்டுகிறது. ஆனால் குளிரையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்
 
இந்த நிலையில் டெல்லியில் வாழும் சீக்கிய சகோதரர்கள் போராட்டம் செய்யும் மாணவர்களுக்கு பிரியாணி, டீ ஆகியவற்றை வாங்கி கொடுத்து வாங்கிக் கொடுக்கின்றனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
 
இதுதான் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் என்றும் இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் தான் குடியுரிமை திருத்த சட்டம் இருப்பதாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
மேலும் சீக்கிய சகோதரர்களின் இந்த செய்கையை பார்த்த மற்றவர்களும் உணவு தண்ணீர், போர்வை உள்பட பல பொருட்களை போராடும் மாணவர்களுக்கு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது