செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (14:01 IST)

ஆகாஷ் அம்பானிக்கு ஆண் குழந்தை: தாத்தா ஆகிவிட்டார் முகேஷ் அம்பானி!

ஆகாஷ் அம்பானிக்கு ஆண் குழந்தை: தாத்தா ஆகிவிட்டார் முகேஷ் அம்பானி!
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும் ஷோல்கா மேத்தா என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஷோல்கா சமீபத்தில் கர்ப்பமானார் என்ற செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆகாஷ் அம்பானி ஆண் குழந்தை பிறந்துள்ளது குறித்து முகேஷ் அம்பானியின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்
 
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷோல்காவுக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் தாயும் மகனும் நலமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் முகேஷ் அம்பானி தற்போது தாத்தா ஆகியுள்ளதை அடுத்து அவரது குடும்பத்தினர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்