செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (18:57 IST)

5 ஜி ... அடுத்த வருடம் இளைஞர்கள் கையில் - முகேஷ் அம்பானி

இந்தியாவின் தொழில் புரட்சியைப்போன்று உண்டாக்கியவர் ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி. அவரது மகன்கள் இந்தியாவில் மொபைல் புரட்சியை உண்டாக்கினார். இதையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது ஜியோ நெட்வொர்க் மூலம் இந்தியாவில் அனைவருக்கும் இணையசேவையை சாத்தியமாக்கினார்.

இந்நிலையில் பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிக் கொடிநாட்டி, ஆசியாவிலேயே முதல் பெரும் பணக்காரராக இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் ஆர்வமுடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 5ஜி சேவையை இந்தியாவில் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இன்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இதனால் இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.