வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (12:47 IST)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் அழைப்பு.. மறுப்பு தெரிவித்த ‘ஜெயிலர்’ நடிகர்..!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஜெயிலர் நடிகருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்த நிலையில் அந்த அழைப்பை நடிகர் மறுத்துள்ளார். 
 
படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தவர் நடிகர் சிவராஜ்குமார். இவரது கேரக்டர் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது/ இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார், நடிகர் சிவராஜ் குமாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
 
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உங்களை அழைக்கிறேன், நடிப்பு எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், ஆனால் தேர்தலில் போட்டியிட  வாய்ப்பு கிடைப்பது அரிது, இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 
இதற்கு பதில் அளித்த சிவராஜ் குமார், எனது தந்தை கொடுத்த பரிசு தான் நடிப்பு தொழில். அதில் தான் நான் முழு நேரமாக ஈடுபட விரும்புகிறேன். அரசியலில் சேவை செய்ய மக்கள் பலர் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran