மதுராவில் சுற்றி திரிந்த அல்கொய்தா தீவிரவாதிகள் கைது! – பாதுகாப்பு அதிகரிப்பு!

Army
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 13 ஜூலை 2021 (09:22 IST)
உத்தர பிரதேசத்தின் புனித நகரான மதுராவில் அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த மாதத்தில் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுராவில் வெடிப்பொருள்களுடன் சுற்றி திரிந்த 2 அல்கொய்தா பயங்கரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

சுதந்திர தினத்தன்று நாச வேலைகளில் ஈடுபட பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் மதுராவில் பாதுகாப்பு மற்றும் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் கடுமையான சோதனை நடத்தப்படுவதுடன், கிருஷ்ண ஜென்மஸ்தானம், பிருந்தாவன, தாக்குர் பாங்கே பீகாரி கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :