1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (16:29 IST)

இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்காரப் பெண் இவர் தான்…

தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார். அவரது நிறுவனம் ஹெச்.சி.எல்லின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதை அடுத்து அவரது மகள் ரோஷினி நாடார் இன்று புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஷிவ் நாடாரின் ஹெச்.சி.எல்.  நிறுவனத்தில் சுமார் 1,50,287 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவரது சொத்து மதிப்பு ரூ, 1 லட்சத்திற்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷிவ் நாடார் பதவி விலகினாலும் அவர்  மேலாண் இயக்குநர், வியூக வடிவமைப்பாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ரோஷிணி நாடார் ரூ.31400 கோடி சொத்து மதிப்புகளுடன் பணக்கார பெண்களில் முதலிடத்தில் உள்ளார். இவர் நிர்வாகம் தவிர, பெண்கள் மேம்பாட்டிலும் வன உயிர்கள் பாதுக்காபிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் ஷிக்தர் மல்ஹோத்ரா. இந்தத் தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.