தனிக்கட்சி தொடங்கினார் முதல்வரின் சகோதரி: ஆட்சியை பிடிப்பாரா?
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா என்பவர் தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக தனிக் கட்சியை தொடங்கிய ஜெகன் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தையும் அவர் குறி வைத்துள்ளார். நேற்று ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர் ரெட்டியின் பிறந்தநாளை அடுத்து ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா என்பவர் தனி அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்
ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி என்ற பெயருடைய இந்த கட்சியின் தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது தெலுங்கனாஅவில் சந்திரசேகர ராவின் ஆட்சி தெலுங்கானாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த ஆட்சியை புதிய கட்சி தொடங்கிய சார்மிளா குறை கூறியுள்ளார்
தெலுங்கானா மாநிலத்தில் மக்கள் இன்னும் வறுமையில் இருந்து மீளவில்லை என்றும் கடந்த 7 ஆண்டுகளில் சந்திரசேகர ராவ் மற்றும் அவர்களது உறவினர்கள் மட்டுமே செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றும், அவரிடமிருந்து தெலுங்கானா மாநிலத்தை மீட்பதே தனது நோக்கம் என்றும் ஷர்மிளா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் முதல்வராக இருக்கும் நிலையில் ஷர்மிளா தெலுங்கானாவில் முதல்வர் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்