செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (17:05 IST)

சென்செக்ஸ் 514 புள்ளிகள் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று பங்குச்சந்தை 514.34 புள்ளிகள் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று காலை முதல் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இறுதியில் சென்சஸ் 514.34 புள்ளிகள் உயர்ந்து 59,005.27 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 165.10 புள்ளிகள் உயர்ந்து 17,562 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது
 
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் பதினோரு பங்குகளில் 11 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும், 19 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஏசியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டிஸ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்று கணிசமாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது