திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 5 நவம்பர் 2018 (17:42 IST)

தாஜ்மஹாலுக்குள் தொழுகை கூடாது : உச்ச நீதிமன்றம்

நம் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் பாரம்பரிய சின்னமான தாஜ்மஹாக்குள் யாரும் தொழுகை நடத்தக்கூடாது என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் அதை தொல்லியல் துறை நிறைவேற்றியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள யமுனை நதியோரத்தில் ஷாஜகானால் கட்டி எழுப்பப்பட்ட தாஜ்மஹால் இன்று உலக மக்களால் அதிசயமாக கொண்டாடப்டுகிறது.
 
இந்நிலையில் உள்ளூர் முஸ்லீம்கள் மட்டும் தாஜ்மகாலுக்குள் கட்டணமில்லாமல் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
 
 அவர்கள் அங்கு மதியநேரத்தில் தொழுகை நடத்துவது வழக்கம்.
 
அதேபோல கட்டணம் கட்டி தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வருபவர்களும் உள்ளே தொழுகை நடத்தி வருவதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக செய்திகள் வெளியானது.
 
இதனையடுத்து தாஜ்மஹாலுக்குள் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தொழுகை நடத்த விதித்து உத்தரவிட்டுள்ளது.மட்டுமின்றி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தொழுகையில் உள்ளூராகாரர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனவும் உத்தவிட்டதுடன்.  இந்த உத்தரவு அமல்படுத்த தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்  காரர்கள் தொழுகைக்கு அனுமதிக்கப்படவில்லை.