வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 நவம்பர் 2022 (14:47 IST)

7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவு: பா.ஜ.க. எத்தனை தொகுதிகளில் வெற்றி?

vote
6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 3ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகாமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), தாம்நகர் (ஒடிசா), கோலகோகர்நாத் (உத்தர பிரதேசம்) மற்றும் முனோகோடே (தெலுங்கானா) ஆகிய 7 சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 
 
கோபால்கஞ்ச், ஆதம்பூர், தாம்நகர், கோலகோகர்நாத் ஆகிய 4 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது
 
ராஷ்டீரிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி மற்றும் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி தலா 1 தொகுதியில் முன்னிலை வகித்து வருகின்றன.
 
பீகாரின் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் நீலம் தேவி முன்னிலை 
 
அந்தேரி கிழக்கு தொகுதியில், உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் ருதுஜா லத்கே 24,955 வாக்குகள் பெற்று முன்னி
 
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள  முனோகோடே தொகுதியில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி வேட்பாளர் கூசுகுந்த்லா பிரபாகர் ரெட்டி 26,443 ஓட்டுகள் பெற்று முன்னிலை
 
Edited by Siva