திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 1 மே 2014 (17:37 IST)

மோடியை பாகிஸ்தானிற்கு அனுப்புங்கள் - லாலு பிரசாத் யாதவ்

ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை  பாகிஸ்தானிற்கு அனுப்பவேண்டுமென பேசியுள்ளார்.

நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன், தான் பிரதமராக பதவி ஏற்றால், 1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டுவருவேன் என்று தொலைக்காட்சி செய்தி ஒன்றில் பேட்டியளித்திருந்தார். இது குறித்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.

மோடியின் பேச்சு பாகிஸ்தான் மீது அவர் கொண்டுள்ள பகைமையின் உச்சத்தை குறிப்பதாகவும், மிகுந்த கோபத்தை கொடுப்பதாகவும் உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் கூறியிருந்தார்.

 தாவூத்இப்ராகிம்முக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது என்றும், பாகிஸ்தானில் சோதனை நடத்துவோம் என்றும் கூறுபவர்களுக்கு, இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படும் அளவிற்கு பாகிஸ்தான் ஒன்றும் பலவீனமான நாடு அல்ல என்று தெரிவித்துக் கொள்வதாகக் கூறியிருந்தார்.

 தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருவதாக மோடி பேசியிருப்பது, இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகவும், பாகிஸ்தான் மீது அவர் கொண்டுள்ள பகைமையின் உச்சத்தை குறிப்பதாகவும், மோடி இரு நாட்டின் உறவை சீர்குலைக்கும் வகையில் பேசுகிறார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், நரேந்திர மோடியை பாகிஸ்தானிற்கு அனுப்பிவைக்கவேண்டும். பாஜக- வை  சேர்ந்த சிலர் மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியதுதான் என்று கூறிவருகிறார்கள். ஆனால், நாம்  மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம்.அதுதான் அவருக்கு நல்ல மருந்தாக இருக்கும் என்று பேசினார்.

லாலுவின் இந்த பேச்சிற்கு பதிலளித்த பாஜகவின் செய்தி தொடர்பாளர் சையத் ஷானவாஸ் ஹுசைன், நாம் என் லாலுவை பாகிஸ்தானிற்கு அனுப்பக்கூடாது? அவர் பாகிஸ்தானில் பிரபலமானவரென சொல்லிக்கொள்கிறார். அவரை அங்கு அனுப்புவதுதான் சரியான முடிவாக இருக்குமென தெரிவித்துள்ளார்.