1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2023 (13:50 IST)

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்: மனதார பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்..!

இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் இன்னும் சில மணி நேரத்தில்  நிலவில் தரையிறங்க இருக்கும் நிலையில் உலகமே இந்த நிகழ்வை பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி பவாத் உசேன் என்பவர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் மட்டும் இன்றி உலக நாடுகள் இஸ்ரோவின் இந்த முயற்சியை வியந்து பார்த்து வருகிறது என்றும் நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் லேண்டரை தரையிறக்கியது இல்லை என்றும்  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார் 
 
சந்திராயன் 3  நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பாகிஸ்தான் ஊடகங்கள் நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் மனித குலத்திற்கு இது ஒரு சிறப்பான நாள் என்றும் அவர் தெரிவித்தார்.  இதே நபர் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரோ விஞ்ஞானிகளை இகழ்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran