திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2022 (23:26 IST)

சரக்கு ஆட்டோ ரிக்ஷா மோதி பள்ளி சிறுமி பலி!

கேரள மாநிலத்தில் ஆட்டோவில் இருந்து இறங்கி சாலையைக் கடக்கும் போது, சரக்கு ஆட்டோ மோதி சிறுமி பலியானார்.

கேரள மாநிலம் மலப்புரத்தில் வசித்து வசிப்பவர் ஷப்னா ஷெரீன்(11) இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று  மத்ஜியம், பாண்டிமுட்டம் என்ற பகுதியில் சிறுமி ஆட்டோவில் இருந்து கீழிறங்கி சாலையைக் கடக்கும்போது, வேகமாக வந்த சரக்கு ஆட்டோ ரிக்ஷா மோதி  மாணவி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited By Sinoj