1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. SBI bank former president arrested

ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் கைது!

எஸ்பிஐ வங்கி
ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் கைது!
பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி இவர் டெல்லியில் கைது செய்யப்பட்டதாகவும் இவரை ராஜஸ்தான் போலீஸ் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வாரா கடனுக்காக கையகப்படுத்திய ஓட்டல் ஒன்றின் சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராஜஸ்தான் போலீசார் இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
 
எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி கைது என்ற தகவல் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை .. ஆக மொத்தம் 4 நாள் விடுமுறை!– தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!