தியானத்தின் மூலம் ஞானம் கிடைக்கிறது. தியானத்தின் குறைவால் ஞானம் குன்றிவிடுகிறது. திருப்திதான் பெருஞ்செல்வம். * தீமை புரிபவன் இந்த உலகில் துன்புறுகிறான். மறுமையிலும் துன்புறுகிறான். இரண்டிலும் அவனுக்குத் துன்பமே. தான் செய்த தீமையைப் பற்றி நினைக்கும்போது அவன் துன்புறுகிறான். தீய பாதையில் செல்லும்போது இன்னும் அதிகமாய்த் துன்புறுகிறான். * காஷாய ஆடைகளால் தோள்களை மூடிக் கொண்டிருப்பவர்களிலும் கூட பலர் தன்னடக்கமின்றி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள். அத்தகைய தீமை புரிபவர்கள்...