1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (15:12 IST)

சரத்பவார் மகளுக்கு எதிராக போட்டியிடும் அஜித் பவார் மனைவி.. குடும்ப உறுப்பினர்கள் மோதல்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவாரின் மகள் சுப்ரியா வரும் பாராளுமன்ற தேர்தலில் பாராமதி என்ற தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு உள்ள நிலையில் அதே தொகுதியில் தனது மனைவியை களம் இறக்க அஜித் பவார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து பாராமதி தொகுதி தனக்கு எந்த அளவுக்கு சாதகமாக இருக்கிறது என்பது குறித்து அஜித் பவார் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது

அஜித் பவார் மனைவி சுனேந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார் என்றும் அவருக்கு கட்சியின் தொண்டர்கள் தீவிரமாக பணி செய்வார்கள் என்று கூறப்படுகிறது

 இந்த நிலையில் முதல் முறையாக பவார் குடும்பத்தின் இரண்டு பெண்கள் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் போட்டியிட உள்ளனர் என்பதும் இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கட்சி கூட்டத்தில் பேசிய அஜித் பவாரின் மனைவி சுனேந்திர பவார் எனக்கு பாராமதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் சாமானிய மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்றும் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்றும் கூறியுள்ளார்  

Edited by Siva