வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2016 (17:39 IST)

சாயம் போனால் நல்ல நோட்டு ; இல்லை எனில் கள்ள நோட்டு - மத்திய அரசு அறிவிப்பு

சாயம் போனால் நல்ல நோட்டு ; இல்லை எனில் கள்ள நோட்டு - மத்திய அரசு அறிவிப்பு

பழைய நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கும் நிலையில், புதிய 2000 ரூபாய் நோட்டு, சாயம் போவதாக கூறப்பட்டது.


 

 
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. அதாவது, புதிய 2000 ரூபாய் நோட்டை, தண்ணீரில் நனைத்தாலோ அல்லது ஈரத்துணியால் தேய்த்தாலோ சாயம் போவதாக, வீடியோ ஆதாரத்துடன் பலர் வெளியிட்டனர்.
 
இந்நிலையில் இதுபற்றி மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்தி காந்த தாஸ், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் “புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் சாயம் போவதற்கு, அதை அச்சிடப் பயன்படுத்தும் மை-தான் காரணம். புதிய 100 ரூபாய் நோட்டிலும், ஈரத்துணி வைத்து தேய்த்தால் சிறிது சாயம் ஒட்டும். எனவே, சாயம் போனால் அது நல்ல நோட்டு, போகாவிட்டால் அது கள்ள நோட்டு” என்று அவர் கூறினார்.