1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 25 ஏப்ரல் 2018 (14:57 IST)

சிறுமி கற்பழிப்பு வழக்கு - சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுமியை சாமியார் ஆசாராம் பாபு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
 
இதில் சாமியார் ஆசாராம் உள்பட 3 பேர் குற்றவாளியெனவும், ஆசாராமிற்கு ஆயுள் தண்டனையும், அவருடைய உதவியாளர்கள் ஷில்பி, சரத் ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
 
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி, சாமியார் அடைக்கப்பட்டிருக்கும் ஜோத்பூர் சிறைக்கே சென்று வழங்கனார். பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பையொட்டி உபி, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.