சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜை முடிவடைந்ததை அடுத்து இன்று நடை அடைக்கப்பட்டது. அதற்கு முன்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 26ஆம் தேதி முடிவடைந்தது. அதன் பின்னர் மகரவிளக்கு பூஜை டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கியது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
குறிப்பாக, கடந்த 14ஆம் தேதி மகரஜோதியை லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மகரவிளக்கு பூஜை முடிவடைந்ததை அடுத்து, இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, நைவேத்திய பூஜைகளுக்குப் பின்னர் நடை அடைக்கப்பட்டது.
இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு ஆகிய இரண்டு சீசன்களிலும் மொத்தம் 53 லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாக கூறப்படுகிறது.
Edited by Mahendran