வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (11:30 IST)

இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு அதிக உணவுப் பஞ்சம் ஏற்படும் – அதிர்ச்சியை கிளப்பிய ஐநா அமைப்பு!

கொரோனாவால் இந்த ஆண்டு ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தை விட அடுத்த ஆண்டு அதிக உணவுப் பஞ்சம் ஏற்படும் என உலக உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

நெருக்கடியான சூழல்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டும் விதமாக ஐநாவின் உணவு நிவாரணப் பிரிவுக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலக உணவு அமைப்பின் தலைவர், டேவிட் பியஸ்லி  தற்போது ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் ‘கொரோனா தொற்றால் உலகின் பல பகுதிகளில் உணவுப்பஞ்சம் ஏற்படும் என நாங்கள் எச்சரித்தோம். அதை ஏற்று உலக நாடுகளின் தலைவர்கள் நிதியுதவி, ஊக்கத் திட்டங்கள், கடன் வசூல் நிறுத்திவைப்பு போன்ற சலுகைகளை அவர்கள் அளித்தனர். எனவே இந்த ஆண்டு உணவுப் பஞ்சம் பெரியளவில் தவிர்க்கப்பட்டது. ஆனால் இப்போதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அதனால் 2020-ம் ஆண்டு எங்களுக்குக் கிடைத்த அதே நிதியுதவி அடுத்த ஆண்டு கிடைக்காமல் போகலாம். அதனால் அடுத்த ஆண்டு உணவுப் பஞ்சம் அதிகமாகும் அபாயம் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.