புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 7 ஜனவரி 2021 (07:31 IST)

திருப்பதி கோவிலில் ரூ.29.9 கோடி உண்டியல் வசூல்: வைகுண்ட ஏகாதேசியில் குவிந்த காணிக்கை!

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதனால் அனைத்து மத சம்பந்தமான ஆலயங்களும் மூடப்பட்டன என்பது தெரிந்ததே
 
இருப்பினும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு தளர்வுகள் அறிவித்துக் கொண்டே வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு டோக்கன் வழங்கப்பட்டது என்பதும் அந்த டோக்கன்களை பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் சமீபத்தில் நிகழ்ந்த வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் இதன் காரணமாக கோவில் உண்டியலில் ரூபாய் 29.9 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது 
 
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுமார் 30 கோடி ரூபாய் திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது