வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 8 மே 2017 (21:01 IST)

இந்திய ராணுவத்திற்கு ரூ.1 கோடி கொடுத்த தம்பதி

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தனது சேமிப்பு பணம் ரூ.1 கோடியை ராணுவத்திற்கு பரிசாக கொடுத்துள்ளார்.



 

 
குஜராத் மாநிலைத்தைச் சேர்ந்த ஜனார்த்தன்பாய் என்பவர் ஒய்வுபெற்ற வங்கி அதிகாரி. அவர் தன்னுடைய வைப்பு நிதி சேமிப்பு தொகை ரூ.1 கோடியை ராணுவத்திற்கு வழங்கியுள்ளார். தன் வாழ்முழுவதும் சேமித்த பணத்தை ராணுவதற்கும், ராணூவ வீரர்களும் வழங்கியுள்ளார்.
 
இவர் தனது மனவியுடன் சேர்ந்து இந்த நன்கொடையை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நாட்டுக்காக எல்லையில் தியாகம் செய்து உயிரையும் பணயம் வைத்துப் போராடி வரும் ராணுவ வீரர்களின் இன்னல்களைப் போக்க என்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டுமென்று எண்ணி, இதை செய்துள்ளேன், என்றார்.
 
இந்த உயர்ந்த எண்ணம் உடைய தம்பதிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.