1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (21:22 IST)

அசாம் கானின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அனைத்து கட்சி கூட்டம் : சபாநாயகர் அறிவிப்பு

நேற்று மக்களவையில்   முத்தலாக் தடை மதோசா மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது சமாஜ்வாதி எம்.பி. அசாம் கான் ,சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த பாஜக எம்.பி. ரமா தேவியை பார்ந்து, தனக்கு அவரை மிகவும் பிடிக்கும் எனவும் அதனால் தான் எப்பொழுதும் அவரையே பார்த்துக் கொண்டு இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். 
இதையடுத்து மக்களவையின் நேரமில்லா நேரத்தின் போது, இதுகுறித்து பாஜக எம்.பி. சங்கமித்ரா மௌரியா கேள்வி  எழுப்பினார். அசாம் கான், ரமா தேவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரை  மக்களவையில் இருந்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும், வேண்டுகோள் விடுத்தார். இவரது கருத்துக்கு  திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உட்பட அனைத்து  எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் ,சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார் கூறியதாவது : எம்.பி. அசாம் கானின் சர்சைக்குரிய கருத்து தொடர்பாக நளை அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.