திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (18:01 IST)

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுமா? அமைச்சர் கிரண் ரிஜிஜூ

kiran rijuju
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுமா? அமைச்சர் கிரண் ரிஜிஜூ
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மத்திய சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
தற்போது இருக்கும் சிவில் சட்டத்தை மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்ற ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூபேசியபோது பொது சிவில் சட்டம் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன்பே அதன் பதவி காலம் முடிந்து விட்டது என்றும் பொது சிவில் சட்டம் குறித்து 22 ஆவது சட்ட ஆணையம் முடிவு எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
நாடு முழுவதும் கிரிமினல் குற்றங்களுக்கு மட்டும் ஒரே விதமான சட்டம் இருக்கிறது என்றும் சிவில் என்று சொல்லக்கூடிய திருமண உள்ளிட்ட வழக்குகளுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran