வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (06:50 IST)

மோடி ஆட்சியில் இதெல்லாம் நடந்த நன்மையா?

பாரத பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்ற பின்னர் பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வதாகவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
 
இந்த நிலையில் பிரதமர் மோடியின் ஆட்சியில் நடந்துள்ள நன்மைகள் என்னென்ன என்று பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றன.
 
அதில் குறிப்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட என்.ஆர்.சி. பட்டியலின் மூலம் 40 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் 2.5 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஆதார் அட்டை மூலம் 5 கோடி போலி ரேசன் கார்டுகளும், 3 கோடி எல்;பி.ஜி கனெக்சனும், கண்டுபிடிக்கப்பட்டுள்ள்னர். 
 
அதேபோல் கல்வித்துறையில் நாடு முழுவதும் 50 லட்சம் போலி மாணவர்களும், 10 லட்சம் போலி ஆசிரியர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒரு நாட்டின் முன்னேற்றம் போலிகள் அகற்றப்பட்டாலே தானாக நடந்துவிடும் என்பதால் பிரதமர் போலிகளை ஒழிப்பதில் தீவிர அக்கறை கொண்டுள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.