வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 ஜூலை 2018 (16:24 IST)

ஆதார் எண்ணை வெளியிட்ட டிராய் இயக்குனர்: ஆப்பு வைத்த ஹேக்கர்!

ஆதார் அட்டை பாதுகாப்பானது அல்ல என பலர் கூறி வரும் நிலையில், மத்திய அரசு அதனை பெரும்பாலான இடங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறிவருகிறது. இந்த பிரச்சனையில் தற்போது டிராய் இயக்குனர் சிக்கியுள்ளார். 
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மா ஆதார் பாதுகாப்பானது என ஒரு பேட்டியில் பேசியுள்ளார். மேலும், தனது ஆதார் எண்ணை வெளியிட்டு, முடிந்தால் என்னுடைய தனிப்பட்ட தகவல்களை வெளியிடுங்கள் என்று சவால் விடுத்தார். 
 
இந்த சவாலை ஏற்ற எலியாட் என்ற பிரான்ஸ் ஹேக்கர் ஒருவ்ர், அந்த ஆதார் எண்ணை பயன்படுத்தி, டிராய் இயக்குனரின் இரு மொபைல் நம்பர், அவரது வாட்ஸ் ஆப் டிபி, அவரது விலாசம், பிறந்த தேதி, பேன் எண்ணையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். 
 
இதோடு நிறுத்தாமல், ஆதார் அட்டையை நான் எதிர்க்கவில்லை, ஆனால் அதில் பாதுகாப்பு இல்லை என்று அவர் டிவிட் செய்து, பிரதமர் மோடியிடம் உங்கள் ஆதார் அட்டை எண்ணை வெளியிட முடியுமா? எனவும் கேட்டுள்ளார்.