பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவுரை!
பெட்ரோல் மீதான வரியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இனைந்து குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கடுமையான விலையுயர்வுக்கு மத்திய அரசின் பெட்ரோல் மீதான கலால் வரியே காரணம் என சொல்லப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலையேற்றத்தின் மூலம் மறைமுகமாக மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் ஏறி வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.