வெள்ளி, 4 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (17:46 IST)

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

 Currency
ரிசர்வ் வங்கி அறிவித்ததின்படி, மகாத்மா காந்தி வரிசையில் ரூ.10 மற்றும் ரூ.500 மதிப்புள்ள புதிய நாணயத் தாள்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இந்த புதிய தாள்களின் வடிவமைப்பு தற்போது வழங்கப்படும் மகாத்மா காந்தி வரிசை தாள்களை ஒத்தே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
அதே நேரத்தில், இதற்கு முன் வெளியிடப்பட்ட ரூ.10 மற்றும் ரூ.500 மதிப்புள்ள அனைத்து நாணயத் தாள்களும் வழக்கம்போல் செல்லும் என்றும், அவற்றின் மதிப்பு எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி உறுதியளித்துள்ளது.
 
இதற்கிடையில், கடந்த மாதம் ரிசர்வ் வங்கி ஆளுநர் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள புதிய நாணயத் தாள்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. 
 
நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து, சக்திகாந்த தாஸின் பதவியை நிறைவு செய்து, மல்ஹோத்ரா 2024 டிசம்பரில் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றார்.
 
Edited by Mahendran