செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2018 (06:30 IST)

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை: முதல்வர் அதிரடி

ஹரியானா மாநிலத்தில் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில்  12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நேற்று ஹரியானா மாநிலத்தின் கர்னல் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மனோகர் லால் கட்டார், '12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளை தூக்கில் போட வகை செய்யும் விதத்தில் புதிய சட்டம் மாநில அரசால் விரைவில் இயற்றப்படும் என்றும் அதே சமயம் கற்பழிப்பு சம்பவங்களின் உண்மை தன்மையை உறுதி செய்த பின்னரே இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒருபுறம் சிறுமிகளின் கற்பழிப்பு சம்பவம் அதிகரித்து வந்தாலும் போலியான கற்பழிப்பு புகார்களில் அப்பாவிகளும் சிக்குகின்றனர் என்பதும் கடந்த ஆண்டில் பதிவான கற்பழிப்பு புகார்களில் 25 சதவீதம் பொய்யானவை என்று கண்டறியப்பட்டதே இதற்கு சான்று என்பதும் குறிப்பிடத்தக்கது.