வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (11:40 IST)

பேருந்துகளில் ராமர் பக்திபாடல்கள் ஒலிபரப்ப வேண்டும்; உபி அரசு உத்தரவு..!

அயோத்தியில்  கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் வரும் 22ஆம் தேதி வரை ராமர் பக்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என உத்தரப் பிரதேசம் மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

 உத்தரப்பிரதேச பேருந்துகளில் இன்று முதல் வரும் 22ஆம் தேதி முதல் வரை ராமர் பக்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்றும் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை அடுத்து மாநில போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளன.

இதனால் இன்று முதல் 22ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் பக்தி பாடல்கள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த உத்தரவுக்கு பலர் வரவேற்பையும் சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran