வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2024 (13:10 IST)

ராமர் ஒரு அசைவர்.. 14 வருடம் காட்டில் இருந்து எப்படி சைவம் மட்டும் சாப்பிட முடியும்: ஜிதேந்திர அவாத்

ராமர் 14 வருடங்கள் வனவாசம் இருந்த நிலையில் 14 வருடங்கள் காட்டில் வாழ்ந்த ஒருவரால் எப்படி சைவம் மட்டும் சாப்பிட்டு வாழ முடியும் என்றும் அவர் கண்டிப்பாக ஒரு அசைவர் தான் என்றும் என்சிபி கட்சியின் எம்எல்ஏ ஜிதேந்திர அவாத் என்பவர் கூறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

ராமர் வெகுஜனங்களில் ஒருவர், அவர் நம்மை போலவே உணவு பழக்கம் கொண்டவர் தான். காட்டில் அவர் வேட்டையாடி உணவு அருந்தி இருப்பார். நீங்கள் எங்களையெல்லாம் சைவராக மாற்ற முயலும் போது ராமரின் கோட்பாடுகளை நாங்கள் பின்பற்றுகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  

ராமர் சைவம் மட்டும் சாப்பிடுபவர் இல்லை, அவர் அசைவம் உண்டவர், 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தவர் எங்கே சென்று சைவ உணவை தேடி இருப்பார். நான் கேட்பது சரியா தவறா என்று அவர் பேசினார்

 ஜிதேந்திர அவாத், ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பாஜக எம்எல்ஏ பதிலடி கொடுத்துள்ளார்.  யார் வேண்டுமானாலும் ராமரை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம், இந்துக்களை யார் வேண்டுமானாலும் கேலி செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  ஆனால் தேர்தல் நேரத்தில் மற்றும் இந்துத்துவா பற்றி பேசி போலியாக பேசுவார்கள் என்று கூறியுள்ளார்

Edited by Mahendran