வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (19:20 IST)

பிரபல நடிகரின் கட்சியில் இணைந்த ராம்மோகன் ராவ்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வுக்கு பின் அரசியல் கட்சியில் இணைவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகி வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளராக பணியாற்றிய ராம்மோகன் ராவ் பிரபல நடிகர் ஒருவரின் அரசியல் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.
 
பிரபல தெலுங்கு நடிகரும் பவர்ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்படுபவருமான பவன்கல்யாண்  ஜன சேனா கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த கட்சியில் தான் ராம்மோகன் ராவ் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த ராம்மோகன் ராவ் அவர்களுக்கு அரசியல் ஆலோசகர் பதவியை பவன்கல்யான் கொடுத்துள்ளார். 
 
எனவே வரும் பாராளுமன்றம் மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பவன்கல்யாண் கட்சியின் வெற்றிக்கு ராம் மோகன் ராவ் ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.