1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 25 மே 2016 (16:14 IST)

எம்பி -ஆகிறார் ஜெயலலிதா வழக்கறிஞர் - ஆனால், அதிமுகவில் இல்லை

எம்பி -ஆகிறார் ஜெயலலிதா வழக்கறிஞர் - ஆனால், அதிமுகவில் இல்லை

ராஷ்டிய ஜனதா தளம் கட்சி சார்ப்பில், வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 

 
பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி, பாஜகவில் விரும்பி இணைந்தார். பாஜக தலைமைக்கு எதிராக அவர் செயல்பட்டதாக கூறி, பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில், ராஷ்டிய ஜனதா தளம் கட்சி சார்பில்  ராஜ்யசபா வேட்பாளராக வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜராகி வாதாடியவர் என்பது குறிப்பிடதக்கது.