திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (11:47 IST)

ஹைதராபாத்தில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேரணி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர். 

 
இஸ்லாமிய இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உலக இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில் பாஜக தலைமை நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்தது. நுபுர் சர்மா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பாஜகவில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர். அவர்கள் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக அனுமதியின்றி பேரணி நடத்தியதாக சில அமைப்புகளின் நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.